பயிர் பாதுகாப்பு :: வாழைப் பயிரைத் தாக்கும் நோய்கள்

வெள்ளரி தேமல்: வெள்ளரி தேமல் நச்சுயிரி

தாக்குதலின் அறிகுறிகள்:
  • தொடர்ச்சியான அல்லது தொடர்ச்சியற்ற வெளிறிய மஞ்சள் நிறக் கோடுகள், இலை நரம்புகளுக்கு இடையில் இலை விளிம்பிலிருந்து பரவிக் காணப்படும்.
  • இலைகள் கறுத்து, சுருண்டு, இலை விளிம்புகள் மடிந்து இலைகள் கொத்தாக உச்சிப்பகுதியில் நிமிர்ந்து காட்சியளிக்கும்.
  • இந்நோயின் ஆரம்பத்தில் இலைப் பரப்புகள், இளம் கன்றுகளின் இலைகளிலும் மஞ்சள் நிற, வெளிறிய தேமல் போன்ற கோடுகள் ஆங்காங்கு தென்படும்.
  • இலைகள் வழக்கத்திற்கு மாறாக குறுகி, சிறியதாகவும் மரங்கள் வளர்ச்சியின்றி குட்டையாகவும்  இருக்கும். அதிகம் பாதிக்கப்பட்ட மரங்கள் குலை தள்ளாது. இவற்றில் நச்சுயிரிகள் அதிக எண்ணிக்கையில் வாழும்.
  • இந்நோய் வெள்ளரி தேமல் நச்சுயிரியால் (CMV) பரவுகின்றது.
  • நோய் பாதித்த மரத்தின் கன்றுகளை நடுவதாலும், பூசணி வகைகளில் வாழும் அசுவினிகளான  ஏபிஸ் காஸிபி மற்றும் ஏபிஸ்‌  மெய்டிஸ் போன்றவற்றாலும் இந்நோய் பரவுகின்றது.
         
  வெளிறிய மஞ்சள் நிறக் கோடுகள்        

கட்டுப்படுத்தும் முறை:

  • தோட்டத்தில் களைகளின்றி சுத்தமாகப் பராம‌ரிக்கவும்.
  • பாதிக்கப்பட்ட கன்றுகளை நடுதல் கூடாது.
  • வயல் அருகில் களைகள் இருந்தாலும் நச்சுயிரி அதில் தங்கி இருக்கும் ஆதலால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
  • பூசணி, வெள்ளரி மற்றும் பிற பூசணி வகைப் பயிர்களையும் வாழைத் தோட்டத்தில் ஊடுபயிராக பயிரிடக் கூடாது.
  • தோட்டத்தை தினசரி கவனித்து நோய்த் தொற்றுள்ள வாழையினை உடனே அகற்றி, உரிய நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றவும்.
  • அசுவினி பேன்ற ‌நோய்க் கடத்திக் காரணிகளை கட்டுப்படுத்த பாஸ்போமிடான் 1 மி.லி/லி அல்லது டெமட்டான் 2 மி.லி/லி ஏதேனும் ஒரு மருந்தைத் தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015